education for SALE
நீரின்றி அமையாது உலகு என்பது தற்போது கல்வியின்றி அமையாது உலகு என்றாகிவிட்டது . அத்தகைய கல்வியின் நிலையைப் பற்றிய கருத்துக்களை இதன் வாயிலாக பகிர்கிறேன் . கல்வி மட்டுமே இவ்வுலகில் பெரும் செல்வமாக கருதப்படுகிறது . கல்வியே ஒரு நாட்டின் நாகரிகம் , செல்வம் , கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது . நாட்டின் பொருளாதாரம் கல்வியை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது . உலக வங்கி ஒரு நாட்டின் கல்வியறிவு சதவீதத்தைக் கொண்டே கடன் வழங்குகிறது . குடிநீர் சந்தைப் பொருளாக மாறிய போது மனிதம் இழந்தோமோ அதைப் போல் இப்போது கல்வியும் புதிய சந்தையாக உருவெடுத்துள்ளது . பணத்தை கொடுத்து கல்வி கற்கும் மாணவன் எவ்வாறு இந்த சமுதாயத்தை பற்றி சிந்திப்பான் ? கல்வி என்பது தனி மனித வளர்ச்சிக்கு அல்ல ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கவேண்டும் . இந்தியாவின் கல்வி முறை தற்போது மிகவும் மோசமாக உள்ளது . இந்திய மாணவர்கள் தேர்வினாலும் பெற்றோர்களாலும் மிகுந...