education for SALE


நீரின்றி அமையாது உலகு என்பது தற்போது கல்வியின்றி அமையாது உலகு என்றாகிவிட்டது. அத்தகைய கல்வியின் நிலையைப் பற்றிய கருத்துக்களை இதன் வாயிலாக பகிர்கிறேன்.


கல்வி மட்டுமே இவ்வுலகில் பெரும் செல்வமாக கருதப்படுகிறது. கல்வியே ஒரு நாட்டின் நாகரிகம், செல்வம்,கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்த  உதவுகிறது. நாட்டின் பொருளாதாரம் கல்வியை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. உலக வங்கி ஒரு நாட்டின் கல்வியறிவு சதவீதத்தைக் கொண்டே கடன் வழங்குகிறது.


குடிநீர் சந்தைப் பொருளாக மாறிய போது  மனிதம் இழந்தோமோ அதைப் போல் இப்போது கல்வியும் புதிய சந்தையாக உருவெடுத்துள்ளது. பணத்தை கொடுத்து கல்வி கற்கும் மாணவன் எவ்வாறு இந்த சமுதாயத்தை பற்றி சிந்திப்பான்?  கல்வி என்பது தனி மனித வளர்ச்சிக்கு அல்ல ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கவேண்டும்


இந்தியாவின்  கல்வி முறை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. இந்திய மாணவர்கள் தேர்வினாலும் பெற்றோர்களாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.போட்டிகள் நிறைந்த கல்வி முறை நன்மைக்கே ஆனால் போட்டிகள் மட்டுமே நிறைந்த கல்வி முறை சிறந்தது அல்ல. நம் நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பலரும் தாய் மொழி அல்லாது வேற்று மொழியிலே கல்வி கற்கின்றனர்.ஒரு குழந்தை தன் தாய் மொழியின் அரவணைப்பை உணர்வதற்கு முன்பே வேற்று மொழியில் பயிலச் சொல்வது எப்படி சிறந்த கல்வி முறையாய் இருக்கக் கூடும்?


இந்த வேற்று மொழிக் கல்வியே ஒரு மாணவனுக்கு தான் கற்கும் பாடத்தை முழுமையாகப் புரிந்துக் கொள்ள வாய்ப்பளிப்பதில்லை. மற்ற நாட்டவர்கள் பல அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குவது தாய் மொழிக் கல்வியினாலே என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தியா  போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் எதற்கெடுத்தாலும் போட்டியே நிலவும். மாணவர்கள் சிறு வயது முதலே கடுமையான போட்டிக்கு தள்ளப் படுகிறார்கள். மாணவர்களின் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவா சிறந்த கல்வி முறை இது சிசுக்கொலையை விடக் கொடூரமானது.
சிறந்த மருத்துவரை உருவாக்குவதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டது ஆனால் அதிலும் பணம் கொடுத்து தானே இடம் பெறுகிறார்கள்.720க்கு 110 மதிப்பெண் எடுத்து பணம் கொடுத்து இடம் பெற முடியும் என்றால் பின்பு எதற்காக இந்த தேர்வு?


பல கோடிகளில் லாபம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய பொறியாளர்கள் தலைமை தாங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் பொறியியல் படித்து விட்டு அரசின் துப்புரவு பணிக்காக விண்ணப்பிக்கிறார்கள்.


இனி நம் நாட்டில் கல்வி வீழ்ச்சி அடைவதற்கு ஒன்றும் இல்லை. இதற்கு காரணம் செயல்முறைக் கல்வி இல்லாததே. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல ஏட்டு கல்வி எதற்கும் உதவாது. செயல் முறை கல்வியிலே ஒரு மாணவன் தனது கற்பனையை வெளிப்படுத்த முடியும்.


கற்பனைத் திறனே அறிவை விடச் சிறந்தது (Imagination is more powerful than knowledge)
                       ---------ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இன்றைய மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லை. பாடப் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை. இத்தகைய பாரத்தை எதற்கு அவர்களுக்கு அளிக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக என்ன சாதித்தோம்?

பல நாடுகளிடம் இருந்து பெற்று சிறந்த அரசியல் சாசன சட்டத்தை இயற்றியது போல் மற்ற நாடுகளை பார்த்து கல்வி முறையையும் மாற்ற வேண்டும்.
எதற்க்கெடுத்தாலும் ஏன் பக்கம்  பக்கமாக பதில் எழுத வேண்டும். எல்லா மாணவர்களும் நீதிபதிகளாகவோ,எழுத்தாளராகவோ உருவாவதில்லை. பின்பு ஏன் இந்த பெரிய விடைகள் மாணவர்களின் கற்பனையையும் அறிவுத்திறனையும் பரிசோதிக்க நமக்கு ஒற்றை சொல் வினாக்கள் (Multiple Choice Questions)போதாதா ?

என்னை போன்ற பைத்தியக்காரன் எழுத வேண்டும் என்று தோன்றினால் அவன் இணையதளத்திலும் எழுதுவான் புத்தககங்களிலும்  எழுதுவான். நீங்கள் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டாம் கற்பனை திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குங்கள்.

நம் நாட்டில் ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே குடியுரிமை, ஒரே குடும்ப அட்டை  போல ஒரே கல்வி சமமான கல்வியை ஏன்  கொண்டு வரவில்லை? கல்வியை விற்பதே பகல் கொள்ளை என்று இருக்கும் போது அதை வெவ்வேறு விலைகளில் விற்று வருகின்றனர் .

STATE BOARD, CBSE , ICSE என்று  ஏன் இத்தனை வேறுபாடுகள். சட்டம் இயற்றிய போது இதை மறந்திருந்தால் தவறில்லை.  சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் தவறு. உயர் சாதியினரின் வாக்கு வங்கியை பெற முடியாத போது உடனே இட ஒதுக்கீடு செய்த அரசால் கல்வி முறையை  மாற்ற முடியவில்லை என்பதே இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை.

கல்வியை நீங்கள் மாற்ற போவதில்லை ஏன் என்றால் மாணவர்களுக்கு வாக்குரிமையும் இல்லை  வாக்கு வங்கியும் இல்லை.எதிர்காலத்திலும் இதே நிலை நீடித்தால் வல்லரசு கனவு கனவாகவே இருக்கும்.


பின்லாந்து நாட்டின் கல்வி முறையே சிறந்த கல்வி முறையாக கருத படுகிறது. இங்கு மாணவர்களுக்கு தேர்வுகள் வைப்பதில்லை வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை. சிறு வயது முதலே குழந்தைகள்  பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்கின்றனர்.நம் நாட்டில் பள்ளியைக் கண்டு அழாத குழந்தைகளே இல்லை என்று கூறலாம்.பின்லாந்து மாணவர்கள் போட்டி தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்கின்றனர்.


நீங்கள் அதை எளிமையாக விளக்க முடியாவிட்டால், நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளவில்லை(If you can’t explain it simply you don’t understand it well enough)
              ---------ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

விருப்பத்துடன் கல்வியைக் கற்று எளிதாக புரிந்துக்கொண்டு மற்றவர்களுக்கும் எளிதாக புரிய வைத்தால்

நாளை நமதே

                                                                                                            மிதுன் பத்மநாபன்





Comments

  1. Good work Mithun.. keep going and Keep growing !!

    ReplyDelete
  2. Amazing da
    Every aspect of education perfectly analyzed!

    ReplyDelete
  3. Great, it was!MCQ is well enough!

    ReplyDelete
  4. சூப்பர் மிதுன். உன் கற்பனைத்திறன் மூலம் உன் படைப்பாற்றலை வளர்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Each and every point was dicussed🔥.. Sounds well 👏.. Good work!!

    ReplyDelete
  6. The major core problem of our education system is pointed out in brief manner...Well executed machan

    ReplyDelete
  7. தம் தாய் மொழியிலேயே அனைவரும் கல்வி கற்றிட நானும் ஏங்குகிறேன்.

    அருமை டா மிதுன்

    ReplyDelete
  8. Education and health are privatised and govt role decreased education was state subject but now it is common for centre and state Pvt schools collect in lakhs for kg classes govt machinery and politicians are protecting right to education not implemented with True spirit hope for change

    ReplyDelete

Post a Comment

Popular Posts