ஊழல் நிறைந்த மருத்துவம்

நீங்கள் இது வரை காவல்நிலையத்திற்கோ அல்லது பள்ளிக்கூடத்திற்கோ கூட செல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்திருக்க முடியாது. உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்  நாம், அதற்காக நமது சொத்தையே எழுதித்தரத் தயாராக உள்ளோம். இன்றைய மருத்துவத்தின் நிலைமை என்ன ? நாம் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று இப்பதிவில் நான் கூற விரும்புகிறேன்.
இந்தியாவில் 460 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வருடத்திற்கு  63,985 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்கின்றனர். வருடத்திற்கு 35000 மருத்துவர்கள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆஸ்திரேலியாவில் 5ல் 1 மருத்துவர் இந்தியர். இங்கிலாந்தில்  10ல் 1 மருத்துவர் இந்தியர். இப்படி இந்தியாவில் படித்த பல மருத்துவர்கள் வெளிநாடுகளில் கொடி கட்டி பறக்கின்றனர். ஆனால் நமது நாட்டின் நிலைமை என்ன ???
உலக சுகாதார அமைப்பு இந்தியாவிற்கு 10 லட்சம் மருத்துவர்கள் தேவை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
1000 நோயாளிகளுக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் நம்மிடம் 1000 நோயாளிகளுக்கு 1 மருத்துவர்கூட இல்லை என்பது வேதனைக்குரியது.இனி நமது நாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இருந்தால் கூட நமது நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய 20 வருடங்கள் ஆகும்.
இந்த கொடுமைக்கான காரணங்கள் என்ன???
1990களில்  தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட   மிகப் பெரிய புரட்சி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பலரும் பொறியியல் படித்து வெளிநாடுகளில் பணி புரிய ஆசை கொண்டிருந்தனர். அமெரிக்க டாலரின் விலையைக் கண்டு வியக்காத இந்தியனே இல்லை என்று கூறலாம்.
மருத்துவம் படித்துச் சம்பாதிப்பதை விட பொறியியல் படித்து செட்டில் ஆக முடிவு செய்தனர். அப்போது இந்தியாவில் உருவான இந்த மனநிலை மாற்றமே இவ்வளவு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்தளமிட்டது.
இதை அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.
பொருளாதாரத்தின் தேவை மற்றும் அளிப்பு(Demand and Supply) கருத்தின் படி அளிப்பு(Supply)  அதிகமாக உள்ள பொறியியல் பட்டதாரிகளின் விலை குறைந்து விட்டது. நமது சமுதாயத்தில் சமநிலை தவறியதால் வந்த நிலைமை இது. இன்று இது மாணவரையும் பெற்றோரையும் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட வைத்து சிறை செல்லும் அளவிற்கு ஆகிவிட்டது. இனி இவர்கள் கொலை செய்தால் தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை வந்தால் அதற்கும் தயங்க மாட்டார்கள். இதற்குக் காரணம் மக்களா அல்லது அரசா  என்ற விவாதத்திற்குச் செல்லாமல் தற்போது நடந்து வரும் மருத்துவக் குற்றங்களைத் தடுப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.
இந்த மருத்துவ கொலை மற்றும் கொள்ளையின் வேர் எது என்று பார்ப்போம்.
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையே இதற்கு முக்கிய காரணம்.
2000த்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டுமானால் வரைவோலையாகவோ (DD) அல்லது காசோலையாகவோ(Cheque) செலுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டால் கல்வியில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிக்கலாம். 
அரசுப் பள்ளிகள் தரமற்று இருப்பது மற்றொரு முக்கிய காரணம்.
அரசு நடத்தும் தேர்வுகள் முறைப்படுத்தாமல் இருப்பது மற்றுமொரு காரணம்.
தேசிய அளவில் நுழைவுத்தேர்வு இருக்கும் போதும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதும் இதற்குக் காரணம் .
ஒரு மாணவர் அரசு மருத்துவக் கல்லூரியில்  படித்து முடிக்க ஆகும் செலவு 20 லட்சம் எனத் தோராயமாக மதிப்பிடப்படுகிறது.
நமது வரியில் இவ்வளவு பொருட்செலவில் படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றக் கூடாது என்ற சட்டத்தை ஏன் அமல் படுத்தக்கூடாது .
அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தது 5 ஆண்டுகளாவது இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
சந்திரயான் விண்கலம் தோல்வி அடைந்தபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் ஏன் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனர்???
குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் போது விற்பனை விலையும் குறையும். அது போல கல்விக் கட்டணம் குறைந்தால் மருத்துவ கட்டணமும் குற்றமும் குறையும்.
கல்வியை வியாபாரம் ஆக்கினால் மனநிலையையும் மருத்துவத்தை வியாபாரம் ஆக்கினால் உடல்நலத்தையும் இழக்க நேரிடும். இது நாட்டிற்குப் பேராபத்தாக முடியும்.
இந்த நிலை நீடித்தால் நம்மால் இந்த நாட்டில் நிச்சயம் பிழைக்க முடியாது.
நாளைய வளமான இந்தியாவிற்காக ஒன்றிணைவோம்.
இப்படிக்கு,
மிதுன் பத்மநாபன்.


Comments

Post a Comment

Popular Posts