நானும் தீவிரவாதியே...


இந்த பதிப்பை நீங்கள் படிப்பதற்கு முன்பு உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். உங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு செயலை செய்ய வேண்டும் என்றும் அதற்கு சன்மானமாக பல கோடி ரூபாய் வழங்குவதாக கூறினால் உங்களது பதில் என்ன? பலரது பதில் இறந்த பிறகு சன்மானத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று கூறுவர்.அவ்வாறு இருக்கும் போது ஏன் ஒரு தீவிரவாதி தன் உயிரைப் பணயம் வைத்து ஓர் கொடூரமான தாக்குதலை நடத்த வேண்டும். இந்த தாக்குதலால் அவனுக்கு கிடைப்பது திருப்தி மட்டுமே.
அவன் எதிரியை தாக்கவில்லை தனது சொந்த சகோதரர்களைய தாக்கியுள்ளான்.இந்த தாக்குதல் குறித்து பிரதமர் கூறும்போது இதை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறினார்.ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை அனைவரும் மறந்துவிட்டோம்.சிறிய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததும் இதற்கு காரணம். NL என்று பதியப்பட்ட வண்டி சாலையில் செல்லும் போது அதை பலரும் நேபாளம் என்றே நினைக்கின்றனர்.சிலர்க்கு மட்டுமே அது நாகாலாந்து என்று தெரிகிறது.இது போன்று அவர்கள் மற்றவர்களால் அறியப்படாமல் இருக்கும்போது அவர்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.இந்த தாக்குதலுக்கு காரணம் உளவுத்துறையின் அலட்சியம் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.நம் நாட்டவர்களே தீவிரவாதிகளாக மாறும் போது கடவுளால் கூட அந்த தாக்குதலை யூகிக்க முடியாது.ஓட்டிற்காக பத்து சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசினால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பட்டதாரிகளும் தீவிரவாதிகளாக மாறினாலும் ஆச்சரியம் ஏதுமில்லை.மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவன் பொறியியல் கல்லூரியில் தீவிரவாதி போன்றே சுற்றிக் கொண்டிருப்பான்.வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு தில்லி அரசு எந்த வித திட்டங்களும் அறிவிக்காமல் இருக்கும் போது அவர்கள் மாவோயிஸ்ட்களாக மாறி கிளர்ச்சி செய்கின்றனர்.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அரசு ஏன் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்ட போது பதிலடி கொடுக்கவில்லை? இந்த வேற்றுமையே தீவிரவாதத்திற்கு அடித்தளம் வகிக்கிறது. துல்லிய தாக்குதலையும் வான் தாக்குதலையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இழிவான செயலை வெட்கமே இல்லாமல் நாம் பார்த்து விட்டு அவர்களுக்கு வாக்களிக்கும் நானும் தீவிரவாதியே!!!  இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட இயலவில்லை என்று எந்த பாகிஸ்தானியும் வருந்தவில்லை.இப்போட்டியை வணிகமாக்கும் நிறுவனங்களே வருத்தப்படுகின்றன.எனவே எதற்கும் உதவாத அறிவிப்புகளை கைவிட்டு அடுத்த தலைமுறையாவது அன்பு நிறைந்த ஆயுதமில்லா உலகில் வாழ வழி வகுப்போம்.அரசியலில் மாற்றமும் நம் சுயநலத்தில் மாற்றமும் ஏற்படாத வரை தீவிரவாதத்தை ஒரு போதும் ஒழிக்க முடியாது.
இனியொரு இனியொரு விதி செய்வோம்
விதியை மாற்றிடும் வழி  செய்வோம்!!!

Comments

Post a Comment

Popular Posts