கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்ற இந்த பாடலை கேட்டவுடன் எந்த ஒரு விவசாயியும் சிலிர்த்து போகவில்லை. அவர்களின் அவல நிலையை அனைவரும் அறிவர் அனால் ஒருவர் கூட ஏன் உதவ முன்வரவில்லை.பணம் கொடுத்தாலும் உணவு கிடைக்காது என்ற நிலை வந்தால் தான் நாம் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்வோம். இந்தியாவின் மொத்த பரப்பளவு 32 லட்ச சதுர கிமீ. தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பளவு 25 லட்ச ஏக்கர்.நாளுக்கு நாள் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.விவசாயிகளின் எண்ணிக்கையே தற்போது குறைந்துவிட்டது. படித்தவர்கள் எவரும் விவசாயம் செய்ய முற்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது மீதமுள்ள விவசாயத்தை காப்பதிலும் அரசுக்கு அக்கறையில்லை. எந்த திட்டத்தில் எவ்வளவு கமிஷன், தன்னிடம் எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதை எண்ணுவதற்கே நேரம் சரியாக இருக்கும் . விளைநிலங்கள் இல்லாத நாடுகளே விவசாயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்கின்றன.சிக்கிம் மாநிலம் 100% இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டது. இங்கு விவசாயத்திற்கே வழியில்லாத போது எங்கிருந்து இயற்கை விவசாயத்தை பற்றி யோசிக்க முடியும்.ஒவ்வொரு தேர்தலின் போதும் அரங்கேற்றப்படும் நாடகம் தேர்தல் முடிந்த பின்பு எவராலும் காண முடியாது. விவசாயிக்கு ஊக்கத்தொகையோ அல்லது நஷ்டயீடோ வழங்காமல் விவசாயத்தை லாபம் அடையும் தொழில் ஆக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது ஒருவர் ஒவ்வொரு பட டிக்கெட்டிற்கும் 1 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அவரது வாக்குறுதி எங்கே. நாம் தேர்ந்தெடுத்த தலைவனையே நம்மால் கேள்வி கேட்க முடியவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் அடுத்து உணவுத்துறையே வணிகம் செய்வதற்கு மிகப்பெரிய துறை என்று கூறப்பட்டது. அதை இப்போதே SWIGGY, ZOMATO போன்ற நிறுவனங்கள் கையில் எடுத்துவிட்டன. இனி வரும் ஆண்டுகளில் விவசாயத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகள் கையில் எடுக்கும் அப்போது ஒரு எம்.பி சொன்னது போல டேட்டா ஆட்டாவை விட மலிவாக கிடைக்கும் ஆனால் போனில் டேட்டாவை வைத்துக்கொண்டு ஒரு போதும் சாப்பிட முடியாது. அரசே மழை வேண்டி யாகம் தான் நடத்துகிறது நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும். ஹிந்தி மொழியை விட முக்கியமான விவசாயத்தை ஒரு பாடமாக படிக்கலாம் .
வரியில் ஒரு சதவீதத்தை விவசாயத்திற்காக செலவிடலாம். 3000 கோடிக்கு சிலை வைப்பதற்கு இது எவ்வளவோ மேல். நாம் அனைவரும் டிசம்பர் 31 நள்ளிரவின் போது புது வருடத்திற்காக காத்திருக்கும் போது ஒவ்வொரு விவசாயியும் ஜூன் 12யை வருட பிறப்பாகவே பார்க்கிறான்.
Very message my son.good
ReplyDeleteவாழ்த்துக்கள். விவசாயம் காப்போம்
ReplyDeleteவிவசாயம் காப்பாற்ற முயற்சி செய்வோம். -(பெரியம்மா )
ReplyDelete