CAA vs NRC
குடியுரிமை
சட்டத்தை பற்றி விமர்சிக்கும் அளவிற்கு நான் சட்ட வல்லுனரும் அல்ல அரசியல்வாதியும்
அல்ல அதனால் இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
குடியுரிமை
சட்ட மசோதா டிசம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில்
அறிமுகப்படுத்த பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு
பிறகு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று சட்டமானது. இவ்வளவு நாட்கள் கடந்த பிறகும் பல குழப்பங்களும்
சட்டத்தை எதிர்த்து சிலரும்,ஆதரித்து சிலரும்,ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று தெரியாமல்
பலரும் இருந்து வருகின்றனர். குடியுரிமை சட்டத்தை CAA (Citizenship Amendment Act)
என்று சுருக்கமாக கூறலாம். தேசிய குடிமக்கள் பதிவேட்டை NRC (National Register of
Citizens) என்று சுருக்கமாக கூறலாம். முதலில் இரண்டும் வெவ்வேறு மசோதாக்கள். தற்போது
CAA மட்டுமே நிறைவேற்ற பட்டு அமலுக்கு வர இருக்கிறது. இரண்டிலும் வெவ்வேறு விதிமுறைகள்
கூறப்பட்டுள்ளன அது தெரியாமல் CAA சட்ட விதிமுறைகளை
NRCக்கும் NRC சட்ட விதிகளை CAAக்கும் மாற்றி
மாற்றி மீம்ஸ் போடுகிறார்கள். நித்தியானந்தா
கூறுவது போல் "மீம்ஸ் போடும் மாம்ஸ்களே" திமுக பேரணியில் காசுக்காக
போன கூட்டத்தை போல எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் மீம்ஸ்களை போட வேண்டாம்.
குடியுரிமை
சட்டம் :
பாகிஸ்தான்,
வங்காளதேசம்,ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று முஸ்லிம்
நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினர் இங்கு 5 வருடங்கள் இருந்திருந்தால்
அதாவது டிசம்பர் 31 2014ற்கு முன் இந்தியாவில் இருந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை
வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
3 நாடுகளிலும்
சிறுபான்மையரான இந்துக்கள்,சீக்கியர்கள்,புத்த மதத்தவர்கள்,சமணர்கள்,பார்சீக்கள் அல்லது
கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் இருந்திருந்தாலே குடியுரிமை வழங்கப்படும்.
இதற்கு முன்பு குடியுரிமை கோர குறைந்தது 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்
என்ற சட்டத்தை இது திருத்தியுள்ளது.ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை
என்பதற்கு மத்திய அரசு கொடுத்த விளக்கம் பின்வருமாறு:
மூன்று நாடுகளிலும்
சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் பெரும்பான்மையினரான
இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் .
இதற்கு
எள்ளளவு கூட எதிர்ப்பு தெரிவிக்க முடியாத வகையில்
புள்ளி விவரங்கள் உள்ளன.
NRC எனப்படும்
தேசிய குடிமக்கள் பதிவேடு 1971ற்கு முன்பு இங்கு இருந்த அனைவரையும் இந்திய குடிமக்களாகவே கருதுகிறது. இதில் எந்த மதமும் அடங்காது. இது வரை அசாமில் மட்டுமே NRC அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 கோடி மக்கள் தொகை கொண்ட அசாமில் இப்பணியை முடிக்க 6 வருடங்கள் ஆகிவிட்டது. இது நாடு முழுக்க அமல்படுத்த போவதாக மத்திய அரசு கூறவே இல்லை.
எனவே
இரண்டும் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்களாக
இருந்தால் ஆவணங்கள் எதுவும் காட்ட தேவையில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. இந்துக்களாக இருந்தாலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட 3 நாடுகளில் இருந்து தான் வந்தீர்கள் என்பதை நிரூபித்தாக வேண்டும்.
NRCயை
நாடு முழுவதும் அமல் படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறினாலும் இதை நாடு முழுக்க அமல்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனைத் தரும்
ஏனென்றால் தமிழகத்தில் கடலூர்,திருப்பூர் வரை நைஜீரியர்கள் மற்றும் சிலர் பரவியுள்ளனர். இத்திட்டத்தை நாடு முழுக்க செயல் படுத்த பல கோடிகள் செலவாகும்.
இதற்கு என மாநில வாரியாக,மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க வேண்டும். அவர்கள் காலத்தை விரயம் செய்யாமல் பணி செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கிக்கொண்டே கையெழுத்து போட்ட நமது அரசு பணியாளர்களால் இப்பணியை சிறப்பாக செய்து முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
இந்தியாவின்
மக்கள் அடர்த்தி (Population
Density) 2011 மக்கள்
தொகை கணக்கெடுப்பின் படி 382 பேர் ஒரு சதுர கிமீக்கு வசிக்கின்றனர். அது இப்போது 412 ஆக இருக்கக்கூடும். ஆனால் மக்கள்
தொகை அதிகமான சீனாவில் இந்த எண்ணிக்கை வெறும் 145 மட்டுமே. தற்போது இருக்கும் வேலையின்மை, வறுமை ,பாதுகாப்பு தொடர்பான
பிரச்சனைகளுக்கு இது தீர்வாகக் கூடும்.
நாடே இஸ்லாமியர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை எனப் போராடும் போது அசாமியார்கள் எவருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது என்று போராடுகிறார்கள். அவர்களின் வாய்ப்பு ஏற்கனவே மற்றவர்களால் தட்டிப் பறிக்கப் பட்டுவிட்டது.
அரசியல்
அமைப்புச் சட்டத்தின் 14ஆம் பிரிவு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்(The State shall not
deny to any person equality before the law or the equal protection of the laws
within the territory of India) என்று
கூறுகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிர்மறையாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்றவாறு மாறாமல் இருக்க திருக்குறள் அல்ல. ஷியா முஸ்லிம்கள் தாக்கப் படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்குறீர்கள் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. ஈழத்தமிழர்களை பற்றி CAAவில் குறிப்பிடாதது மிகப்பெரிய குற்றம். லட்சக்கணக்கானத் தமிழர்களை கொன்று குவித்ததனால் இங்கு வந்தவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு இப்போது எங்கே போனது என்ற எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு
மசோதாவிற்கு ஆதரவாக
வாக்களித்த அதிமுக அரசிடம் பதில் இல்லை. மேலும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இரட்டைக் குடியுரிமை கோருவோம் என்று கூறுவது மிகப் பெரிய பொய். அவர்களால் குடியுரிமை கோர மட்டுமே முடியும். அவ்வாறு இரட்டைக் குடியுரிமை
வழங்கப்பட்டால் நாடு
பிளவுப்படுவது உறுதி. அதைத் தடுக்கவே அம்பேத்கர் இந்தியாவில் ஒரேயொரு குடியுரிமை அது இந்தியக் குடியுரிமை மட்டுமே என்று உறுதியாக கூறினார். மாநிலத்தின் GST வரியையே பெற முடியாத அரசிற்கு இது பகல் கனவாகவே அமையும்.ஒருவரது பெயர் NRCயில் இடம்பெறவில்லை என்றால் அவர் அடுத்தப் பட்டியலிற்காக காத்திருக்க வேண்டும். அதிலும் பெயர் இடம்பெறவில்லை என்றால் அடுத்தப் பட்டியலிற்காக காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அரசு செய்யும் தவறுகளுக்காக குடிமக்கள் தங்களது பணம்,நேரம்,மன நிம்மதி என
அனைத்தையும் செலவு செய்ய வேண்டும்.
முன்னால்
IAS அதிகாரி கண்ணன் கோபிநாதன் கூறியது போல அரசு தனது கடமைகளை ஒழுங்காக செய்யாமல் மக்களின் தலையில் கட்டிவிடுகிறது.
சிறுபான்மையினருக்கு
பாதிப்பு இருக்காது என்று நம்பப் போகும் அந்த ஒரு நொடியில் "வெங்காயத்தை அசைவம் என்று கூறிய அமைச்சரே எனக்கு நினைவுக்கு வருகிறார்".
Super 👏
ReplyDelete